Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு என்னை திட்டவோ, அணைக்கவோ உரிமை இருக்கு! – கமல்ஹாசன் குறித்து குஷ்பூ!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (08:14 IST)
வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்பூ தெரிவித்த கருத்துகளை கமல்ஹாசன் விமர்சித்த நிலையில் அதற்கு அவருக்கு உரிமை உள்ளதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பூ தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார். இவரை சேப்பாக்கம் மற்றும் திருவெல்லிக்கேணி தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளராக நியமித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் குஷ்பூ வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “குஷ்பூவுக்கு வேளாண் சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது” என கூறியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள குஷ்பூ “கமல் எனக்கு நெடுநாளைய நண்பர். என்னை திட்டவோ, அணைக்கவோ அவருக்கு எப்போதும் உரிமை உண்டு. “அரசியல் நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ இல்லை” என்ற கலைஞரின் வாக்குபடி நடப்பவள் நான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments