Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுப் பள்ளியில் ‘சூழல் மேம்பாட்டுக் கழிப்பறை’- விஷ்ணுப்பிரியாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

vishnu priya
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (15:47 IST)
விஷ்ணுப்பிரியா இளம் கட்டடக் கலைஞர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சூழலியல் நெருக்கடிகளை விளக்கி அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்து 'மீள்' எனும் ஆவணப்படத்தை கடந்த ஏழாண்டுகளாக உருவாக்கி வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் கண்டடைந்த தீர்வுகளில் ஒன்று 'சூழல் மேம்பாட்டுக் கழிவறை'எனும் மாற்றுக் கழிப்பறை.

நவீனக் கழிப்பறைகளுக்குச் செலவாகும் தண்ணீரைவிட மாற்றுக் கழிப்பறைகளுக்கு மிகக்குறைவான நீர் போதுமானது. தவிர, மலக்குழி மரணங்கள் போன்ற கொடுமைகளுக்கும் இது தீர்வாக அமைய முடியும் என்பதைக் கண்டறிந்தவர், தற்போது தனது எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார்.

மலைக்கிராமமானநெல்லிவாசலில் செயல்படும் வனத்துறை அரசுப்பள்ளியில் தனது நண்பர்களுடன் இணைந்து மாற்றுக் கழிவறை அமைத்துள்ளார் விஷ்ணுப்பிரியா. இங்கு பயன்படுத்தப்படும் குறைவான நீரும் தேங்கி விடாமல், கசிவுக்குழிகளின் மூலம் வடிகட்டப்பட்டு நிலத்துக்குள் நன்னீராக இறங்குகிறது. குழியில் தங்கிவிடும் கழிவு நுண்ணுயிரிகளால் உரமாக மாற்றப்படுகிறது. சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்று வழிமுறை இது.

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) தினமான டிசம்பர் 12-ஆம் தேதி இந்த "மாற்றுக் கழிவறை'நெல்லிவாசல் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம் அதிகத் தண்ணீர் வசதி இல்லாத இடங்களில்கூட அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கும் விஷ்ணுப்பிரியாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சூழலியலைப் பாதுகாக்கும் அவரது பயணம் தொடரவேண்டுமென வாழ்த்துகிறேன்.எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூழலியலைப் பாதுகாக்கும் அவரது பயணம் தொடரவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்! 23 பேர் பலி