மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருடைய ஒவ்வொரு தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவர் சொல்வதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்
மேலும் அதிமுக திமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசனின் கூட்டணி இருக்கும் என்று பலர் தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திய கமல்ஹாசன் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமலஹாசன் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசர ஆலோசனை செய்ய என்ன காரணம் என்று விசாரித்தபோது காங்கிரஸ் கட்சி கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணியில் இணைய இருப்பதாகவும் இது குறித்து அவசர ஆலோசனை செய்வதற்காகவே பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கமல்ஹாசன் சென்றதாகவும் கூறப்படுகிறது