Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் திட்டத்தைக் காப்பி அடிக்கின்றனர்… திமுக மேல் கமல் விமர்சனம்!

Advertiesment
எங்கள் திட்டத்தைக் காப்பி அடிக்கின்றனர்… திமுக மேல் கமல் விமர்சனம்!
, திங்கள், 8 மார்ச் 2021 (08:12 IST)
நாங்கள் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக காப்பி அடிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஸ்டாலினை சாடியுள்ளார்.

நேற்று திருச்சியில் நடந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் 7 தேர்தல் உறுதிமொழிகளை அறிவித்தார். அதில் அதிகமாக கவனம் ஈர்த்த உறுதி மொழிகள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலும் ஒழிப்பது மற்றும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவது என்ற இரு திட்டங்களும்.

இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை திட்டத்தை ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கமல்ஹாசன் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ‘ஸ்டாலினுக்கு நாங்கள்தான் டயலாக் சொல்லிக்கொடுத்தது போல திட்டங்களை அறிவித்து வருகிறார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். எங்கள் காகிதங்கள் பறந்து சென்று துண்டு சீட்டுகளாக மாறுகின்றன’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவக் கட்டணம் கட்டாததால் தையல் போடாமல் அனுப்பப்பட்ட சிறுமி மரணம்! உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!