Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (10:51 IST)
அரசியலுக்கு வரும் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர்  சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார். அவரது அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

ஆதார் , யுபிஐ வெற்றிக்கு பின் டிஜிட்டல் முகவரி திட்டம்.. மத்திய அரசு அசத்தல்..!

ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments