தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு மினி மெரினா போராட்டம் போல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஆனால் தொலைக்காட்சி மீடியாக்கள் இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தூத்துகுடி மக்களுடன் இணைந்து போராட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டாமல் பதவியை ராஜினாமா செய்ய அதிமுக எம்பிக்கள் முன்வர வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். நேரம் கொடுத்தால் அவரிடம் எங்களது கருத்தை தெரிவிப்போம். மேலும் தூத்துக்குடியில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்கிறேன்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் மூடாவிட்டால் விரிவாக்க பணிகள் நடைபெறக்கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.