நிவர் புயலால் கல்பாக்கம் அணு உலைக்கு ஆபத்தா?

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:56 IST)
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கல்பாக்கம் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி சற்று முன்னர் புயலாக உருவாகி தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிவர் புயல் கரையை கடக்கும் வரை கல்பாக்கம் அணு உலை ஊழியர்கள், குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கல்பாக்கம் பணியாளர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments