Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டாக மாறிய காய்கறி சந்தை : பொதுமக்கள் போராட்டம்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:33 IST)
திருச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட காய்கறி சந்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புறநகர் பகுதியான கள்ளிக்குடியில் 700 கடைகளை கொண்ட ஒருங்கிணைந்த விற்பனை சந்தை கட்டப்பட்டிருந்தது. ஆனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டுக்கு மாற விரும்பவில்லை. மேலும் புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகும் என அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி வருபவர்களை பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் புதிய மார்க்கெட் கட்டிடம் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளிக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளிக்குடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments