தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வு நடைபெறும் என்றும் நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்கடல் நிகழ்வு என்றால் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைந்து சிறிது எதிர்பார்க்காத நேரத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். கேரளாவில் இதனை, கள்ளக்கடல் நிகழ்வு என அழைக்கும் நிலையில் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென கள்ளக்கடல் நிகழ்வு உருவாகுவது உண்டு.
கடந்த மே மாதம் கூட கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதேபோல் தற்போதும் கன்னியாகுமரி திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.