Publish Date: Thu, 17 Aug 2023 (10:48 IST)
Updated Date: Thu, 17 Aug 2023 (10:49 IST)
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட நிலையில் விடுபட்டவர்கள் நாளை முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் தகுதி வாய்ந்த மகளிர்களும் விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய முடியாத குடும்ப தலைவிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.