ஓபிஎஸ்-ஐ தற்கொலைக்கு தூண்டுகிறது பாஜக: அமெரிக்கை நாராயணன் காட்டம்!
ஓபிஎஸ்-ஐ தற்கொலைக்கு தூண்டுகிறது பாஜக: அமெரிக்கை நாராயணன் காட்டம்!
அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டது போல தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவினர் தற்கொலைக்கு தூண்டுகிறார்களா என காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் தமிழக ஆளுநர் விதயாசாகர் ராவ் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அவர் பாஜகவின் கவர்னராக இருப்பதால் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பாஜகவை காலூன்றவைக்க முயற்சிக்கிறார். பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை அவர் ஏற்றுக்கொண்ட விதம் தவறு என சுட்டிக்காட்டிய நாராயணன் பெரும்பான்மையுடன் இருக்கும் சசிகலா தரப்பினரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பதும் தவறு என கூறியுள்ளார்.
பஜகவை தமிழகத்தில் தடம் பதிக்க வைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வைக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்திலும் பாஜகவின் இது போன்ற செயலால் அந்த மாநில முன்னாள் முதல்வர் கலிக்கோ வெறுத்துப்போய் தற்கொலை செய்து கொண்டதாக உதராணம் கூறினார் அமெரிக்கை நாராயணன்.
தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால் அதே முடிவுக்கு தான் முதல்வர் பன்னீர்செல்வத்தை தள்ளுகிறதோ என காட்டமாக கூறியுள்ளார் அவர்.