Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாடு ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதியே ஆதரித்தார்! – பாஜக அண்ணாமலை பதிலடி!

annamalai

J.Durai

, புதன், 14 பிப்ரவரி 2024 (17:20 IST)
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.


 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:-

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜசபா எம்.பியாக மீண்டும் மத்திய பிரதேசத்தில் போட்டியிடுகிறார். இன்று சட்டமன்றத்தில் திமுக கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களை கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை என்பது சொல்வதைவிட காலத்தின் கட்டாயம் என்ற நம்மளை கூறினார். இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு 4 தேர்தல்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் தான் நடைபெற்றது.அப்போது காங்கிரஸ் ஒரே நாடு ஒரே தேர்தலை ரத்து செய்தது.

கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பாதம் இரண்டில் பக்கம் 223 ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக நடக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் கமிட்டி குழு மக்களிடம் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசித்து அறிக்கை வெளியிடும் என்று கூறினார்.

ஒரு எம்பி 20 லட்சம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மேலும் தமிழகம் சட்டமன்றத்தில் கூட துறைமுகம் தொகுதி 1.85 லட்சம் ஓட்டுகளும், சோழிங்கநல்லூர் தொகுதியில் 5.50 லட்சம் ஓட்டுகளும் உள்ளது. பத்து வரியில் முதல்வர் எழுதிக் கொண்டு வந்து ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்பது மிக வேடிக்கையாக உள்ளது என்று கூறினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் தொகை குறித்து எந்த விதமான அடிப்படையும் ஆதாரமில்லை என்ற அண்ணாமலை குற்றம் சாட்டினார். மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பின்றி ஒரே நாடு ஒரே தேர்தலை பிரதமர் மோடி கொண்டு வருவார் என்று தெரிவித்தார்.

எம்.எஸ் சாமிநாதன் பரிந்துரையின் பேரில் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அதிக சதவீதம் ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதி 66 மற்றும் 68 வாக்குறுதியில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் நெல்லுக்கு அதிக கொள்முதல் கொடுப்பார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை கொடுக்கவில்லை ஏன் விவசாயிகள் திமுக எதிர்த்து ஏன் போராட மாட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

 
திமுக மற்றும் காங்கிரஸ் போல் பாஜக எப்போதும் பொய்யான வாக்குறுதி கொடுக்காது என்றும் இன்னும் 60 நாட்களுக்கு மட்டுமே ராகுல் காந்தி பேசிக் கொண்டிருப்பார் என்று விமர்சனம் செய்தார்.

1998 திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பில் 57 பேர் பலியானவர்கள் 250-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 16 பேருக்கு திமுக ஆதரவளித்து இருக்கிறது என்று கூறினார்.

திமுகவில் கொத்தடிமைகள் கூட்டம் அதிகமாக உள்ளது.ஆர்.எஸ் பாரதி 80 வயது கடந்தும் மூத்த தலைவராக செயல்படாமல் கொத்தடிமையாக செயல்பட்டு வருவதாக விமர்சனம் செய்தார்.

போஸ்டரில் இருக்கும் எம்ஜிஆர் புகைப்படத்தை பார்த்து வேணால் உதயநிதி கூட எம்ஜிஆரை ஒப்பிடலாம் என்று கூறினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கீழ்மட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு திரை உலகிற்கு வந்து சினிமாவில் நடித்து தனிப்பெரும் தலைவராக உருவாகினார்.

உதயநிதி ஸ்டாலின் பொருத்தவரை கோபாலபுரத்தில் பிறந்து தன் குடும்பத்தை வளர்த்து பல்வேறு நிறுவனம் ஆரம்பித்து வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். எனவே எம்ஜிஆரையும் உதயநிதி ஸ்டாலின் ஒப்பிடுவது மிகவும் தவறு என்று கூறினார்.

லோக்சபாவை போல் தமிழகம் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் பேசும் போது நேரலை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் வருகை தரும்போது பல்வேறு கட்சியினர் பாஜகவில் இணைய உள்ளனர்.

முதலமைச்சர் வேலுமணி தன் கட்சியில் இருப்பவர்களை கேவலப்படுத்தி பேசி வருகிறார் ஈபிஸ் என்ன 18 வயது இளைஞர் ஒரு கேள்வி எழுப்பினர்?? மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை யாரையும் நாங்கள் விமர்சனம் செய்ய வைக்க மாட்டோம் கண்ணியமாக நடந்து கொள்வோம் என்று அண்ணாமலை கூறினார்.

திமுக ஆட்சியில் தமிழக எல்லைப் பகுதியில் பிரச்சினைகள் நிலவி பெறுகிறது.கம்பத்தில் இருக்கும் முல்லை பெரியார்,கோவையில் இருக்கும் சிறுவானி போன்ற பிரச்சனைகளை திமுக அரசு தீர்த்து வைக்காமல் இந்திய கூட்டணி உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி பொறுத்தவரை திமுகவை எதிர்த்து கேள்வி கேட்காது கேள்வி கேட்டால் திமுக சீட்டு தராது என்று நக்கலாக பதில் கூறினார். எல்ல இளைஞர்களும் நன்றாக இருக்க வேண்டும் திருமணத்திற்கு காதல் இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம்.! வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை..! பா.ம.க. அறிக்கை..!!