Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர்களை காப்பாற்ற வந்த ‘காதல் அரண்’ செயலி

காதலர்களை காப்பாற்ற வந்த ‘காதல்   அரண்’ செயலி
, வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (19:56 IST)
தமிழகத்தை சேர்ந்த வாசுமதி வசந்தி என்பவர் கௌரவக் கொலைகளை தடுப்பதற்காகவும், காதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதற்காகவும், ‘காதல் அரண்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
தமிழகத்தில் ஆணவக்கொலைகள் மற்றும் கெளரவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன, இவற்றை கட்டுப்படுத்த எவ்வளவு தலைவர்கள் முயற்சித்தாலும் முடியவில்லை. 2014 முதல் முன்னூறுக்கும் அதிகமான ஆணவக்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.
 
கடந்த 2016-ம் ஆண்டு சங்கரின் ஆவணக்கொலை தமிழகத்தையே உலுக்கியது. இதுபோன்ற அநீதியான கொலைகளை கட்டுப்படுத்த ‘காதல் அரண்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது.
 
இந்த செயலியின் உதவியை நாடினால் அவர்களுக்குத் தேவையான வகையில், காவல்துறையின் உதவி, வழக்கறிஞர்களின் உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று வாசுமதி வசந்தி தெரிவித்தார்.
 
கடந்த வருடம் காதலர் தினத்தன்று இந்த செயிலி அறிமுகப்படுத்தபட்டது, ஆனால் போதுமான உதவியாளர்கள் இல்லாததால், சரியாக இயங்கவில்லை, ஆனால் இந்த வருடம் அதிக உதவியாளர்களை கொண்டு ’காதல் அரண்‘ செயிலி, காதலர் தினம் முதல் மீண்டும் செயல்படும் என வாசுமதி வசந்தி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி விகவாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு