Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுகூட தெரியாமல் எப்படி ஐபிஎஸ் படிச்சாரு: அண்ணாமலையை விமர்சனம் செய்த அமைச்சர்!

Advertiesment
இதுகூட தெரியாமல் எப்படி ஐபிஎஸ் படிச்சாரு: அண்ணாமலையை விமர்சனம் செய்த அமைச்சர்!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (18:30 IST)
தமிழக அரசு அரிசி ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பொது மக்களுக்கும் ரூபாய் 2000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பொங்கல் பரிசு டோக்கன் விரைவில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரூபாய் 2000 பொங்கல் பரிசு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தேர்தலை கணக்கில் கொண்டு ரூபாய் 2000 லஞ்சமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன
 
இந்த நிலையில் பாஜக தமிழக துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுக்கும் அரசியலை பாஜக என்றும் செய்யாது என்றும் கூறியிருந்தார். ஆனால் நான் கூறியதை தவறாக ஊடகங்கள் சித்தரித்து கூறியதாகவும் அவர் விளக்கம் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் ரூபாய் 2000 விவகாரம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு ராஜு அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். நலத் திட்டங்களை அரசு மூலமாகத்தான் ஆளுங்கட்சி செய்யும் என்றும் இதெல்லாம் தெரியாமல் அவர் எப்படி ஐபிஎஸ் படித்தார் என்று தெரியவில்லை என்றும் பாஜகவின் அண்ணாமலை மீது அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு திடீர் வாபஸ்!