Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம… மறுபரிசீலனை செய்வது நல்லது – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Advertiesment
எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம… மறுபரிசீலனை செய்வது நல்லது – அமைச்சர் கடம்பூர் ராஜு!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:55 IST)
எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு திருமாவளவன், திருமுருகன் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் செய்துள்ளனர். இந்நிலையில் இதுபற்றி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பியபோது ‘புகாரில் உண்மை இருந்தால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி…சாதி,, மத வெறியர்களின் கையில் சிக்காமல் இருப்பதே நல்லது – திருமாவளவன்