பொங்கல் பண்டிகையயொட்டி கடலூரில் நடைபெற்ற கருவாட்டு சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வார திங்கட்கிழமைகளில் அதிகாலை 4 மணியளவில் கருவாட்டு சந்தை நடைபெறும். இந்த முறை பொங்கலை முன்னிட்டு நள்ளிரவு 1 மணியளவிலேயே விற்பனையை தொடங்கியுள்ளனர். கருவாடு வாங்க தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகம் வந்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுணக்கம் கண்டிருந்த கருவாட்டு வியாபாரம் ஜிஎஸ்டி தளர்வுக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வியாபாரத்தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.