Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் கபாலி - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

இணையத்தில் கபாலி - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
, சனி, 23 ஜூலை 2016 (09:12 IST)
கபாலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அதேநேரம் சிறந்த தரத்தில் இணையத்திலும் முழுப்படம் வெளியானது. இதனையடுத்து தயாரிப்பாளர் தாணு சார்பில் நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.


 
 
முன்னதாக, இணையதள சேவை வழங்கும் 169 நிறுவனங்களும், கபாலி படத்தை தாங்கள் இணைய சேவை தந்துள்ள நிறுவனங்கள் கபாலியை இணையத்தில் பதிவேற்றாமல் பார்த்துக் கொள்ளும்படி தாணுவின் மனு காரணமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்குப் பிறகும் முதல்நாளே படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
 
இணையத்தில் கபாலி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால், தடையை மீறி கபாலி திரையரங்குகளில் வெளியான அரைமணி நேரத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை மத்திய அரசு தடுக்க ஏன் தவறியது? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாணு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கபாலி திரைப்படம் இணையத்தில் வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்த பிறகும் எப்படி வெளியானது? இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய கீதம் விவகாரம்: சன்னி லியோன் மீது வழக்குப்பதிவு