Publish Date: Fri, 22 Jul 2016 (10:17 IST)
Updated Date: Fri, 22 Jul 2016 (10:21 IST)
கபாலி படத்துக்கு அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுப்பட்டனர்.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள கபாலி திரைப்படத்திற்கு டிக்கெட் பெற ரசிகர்கள் அனைவரும் தவித்து கொண்டிருக்கின்றனர். படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற மனநிலையுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மனிக்கு ரீலிஸ் ஆனது. இதனைகாண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். இதனிடையே காசி தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சிலருக்கு டிக்கெட் கிடைக்காததால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதே போல் பேனர் ஒன்று சரிந்து ஆட்டோ மீது விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.