பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை...

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (18:40 IST)
நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்திருந்தார்.
 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு நிறுத்தாமல் சிலை உடைப்புகள் நடைபெற்றது. இந்த சர்ச்சை தற்போது அடங்கிய நிலையில், தற்போது பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
காவி உடை மற்றுமின்றி மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments