உண்மையான புளுகுமூட்டை ஜூலிதான் - அம்பலப்படுத்திய வீடியோ
, திங்கள், 3 ஜூலை 2017 (15:39 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலி ஏற்கனவே ஒரு பாடல் ஆல்பம் வீடியோவில் நடித்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜூலி தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், தான் ஒரு செலிலி (நர்ஸ்) ஆக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு கேமரா முன்பு தோன்றியதே இல்லை எனவும் கூறியிருந்தார்.
அதேபோல், பிரபலமாக வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில்தான் ஜூலி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என நடிகை ஆர்த்தியும் சக நடிகைகளிடம் கூறியிருந்தார்.
ஆனால், ஜூலி ஏற்கனவே ஒரு பாடல் ஆல்பம் வீடியோவில் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. யூடியூபில் இந்த வீடியோ 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதன் மூலம் இதற்கு முன் கேமராவின் முன்பு தான் தோன்றியதே இல்லை என அவர் கூறியது பொய் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்