Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீழ்நிலை ஊழியரை பலிகடா ஆக்கவேண்டாம்: சுபஸ்ரீ வழக்கில் நீதிமன்றம் அறிவுரை

கீழ்நிலை ஊழியரை பலிகடா ஆக்கவேண்டாம்: சுபஸ்ரீ வழக்கில் நீதிமன்றம் அறிவுரை
, வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:46 IST)
சுபஸ்ரீ வழக்கில் கீழ்நிலை ஊழியரை பலிகடா ஆக்கிவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டாம் என நீதிமன்றம் சாட்டையை கையில் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று கனடா செல்வதற்காக தேர்வு ஒன்றை எழுதிவிட்டு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் பேனர் ஒன்று விழுந்தததால் பரிதாபமாக தண்ணீர் லாரி ஏறி பலியானார். இதுகுறித்த வழக்கு இன்று நீதிமன்றம் நடைபெற்றபோது நீதிபதிகள் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.
 
முதல் உத்தரவாக சுபஸ்ரீ குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அந்த தொகையை அலட்சியமாக பணி செய்த மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர்மீது நடவடிக்கை எடுத்து வழக்கை முடித்துவிட வேண்டாம் என்றும், தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#BanTheBanner இனியாவது திருந்துமா இந்த அரசியல் சமூகம் -வீடியோ!