மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை 6 ஆண்டுகள் கடந்தும் விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என்பது குறித்து ஜூன் 7ம் தேதிக்குள் விளக்கமளிக்க அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.