Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்
, வியாழன், 14 ஜூன் 2018 (13:46 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

 
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்று 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே உயர் நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது.
 
சரியாக ஒரு மணியளவில் நீதியரசர் எம்.சுந்தர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவருக்கு பின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி வந்தார். ஆனால், இந்த வழக்குக்கு முன் 6 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க வேண்டியிருந்ததால் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவது சற்று தாமதமானது.
webdunia

 
சரியாக 1.40 மணியளவில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
 
இப்படி இரு நீதிபதிகளும் இரு வேறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. அதோடு, இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல்: உலக கோப்பைக்காக போட்டா போட்டி!