இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சட்ட கல்லூரி மாணவி ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அந்த மாணவியை நீதிபதி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சட்டக்கல்லூரி டெல்லி மாணவி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது என்றும் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்
மேலும் இட ஒதுக்கீடு என்பது சாதிப் பாகுபாடுகளை வளர்க்கிறது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் இது எந்த மனு என்றும் இதில் என்ன குறிப்பிடுகிறீர்கள் என்று மாணவியை கடிந்து கொண்டதோடு மனுவை திரும்பப் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து அந்த மாணவி மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.