முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்துகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாகவும் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடுத்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி அவரை காவலில் வைக்க மறுத்து விடுதலை செய்துவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களின் பேசியபோது என் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் மேடையில் பாடியது என்னுடைய பாடல் அல்ல அந்த பாடல் அதிமுக பாடல் என்றும் அவர் கூறினார். மேலும் தன்னை அரசு திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தது என்றும் அவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.