Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று திருமணமாகவுள்ளவருக்கு நேற்று ஜாமீன்: நீதிபதி அதிரடி

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (08:30 IST)
இன்று திருமணம் ஆக உள்ள சிறைக்கைதி ஒருவருக்கு நேற்று ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தஞ்சையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைதாகி கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் என்றும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவரை திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை அழைத்து வெங்கடேஷை திருமணம் செய்ய அவருக்கு சம்மதமா? என்று கேட்டார். அந்த பெண்ணும் சம்மதம் எனக் கூறியதை அடுத்து ’வெங்கடேசன் வாழ்க்கையில் திருமணம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என தான் நம்புவதாகவும் எனவே அவருக்கு திருமணத்தை முன்னிட்டு ஜாமீன் வழங்குவதாகவும் உத்தரவிட்டார்
 
மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரையும் வெளியே விடுவதில்லை என்றாலும் இவருக்காக விதிவிலக்கு அளித்து அவரை உடனே ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்றும் சிறைக் காவல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இன்று திருமணம் நடக்க இருக்கும் வெங்கடேஷுக்கு நேற்று ஜாமீன் கிடைத்ததை அடுத்து இன்று அவருடைய திருமணம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

நகை பறிப்பு சம்பவங்கள்! ஈரானி கும்பல் யார்? சென்னையை குறி வைத்தது எப்படி?

கோடை விடுமுறை சுற்றுலா... இலவசமாக அரசு பேருந்தில் செல்வது எப்படி?

மணிக்கு 160 கி.மீ வேகம்.. கோவை, சேலம், விழுப்புரம்..! - வருகிறது புதிய மித அதிவேக மெட்ரோ ரயில்!

அடுத்த கட்டுரையில்
Show comments