Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? நீதிபதி காட்டமான கேள்வி

டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? நீதிபதி காட்டமான கேள்வி
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:57 IST)
90 பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பதவியை தமிழக அரசு வழங்கியதை அடுத்து பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமனம் செய்வீர்களா? என நீதிபதி கிருபாகரன் சரமாரியாக தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை மாவட்டம் துவரிமான் என்ற பகுதியை சேர்ந்த மதுரைவீரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவு பதக்கங்களும் பரிசுகளும் பெற்றவர் உள்ளதாகவும் ஆனால் மற்ற வீர விளையாட்டு வீரருக்கு இணையாக பதக்கங்கள் பெற்றவர்களாக இருந்தும் திறமைக்கு ஏற்ற பணியை வழங்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களின் வெள்ளிப் பதக்கங்களை வென்ற வீரர் ஒருவருக்கு தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்வது ஏற்க முடியாது என்று கூறினார்
 
பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமனம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களை உலக நாடுகள் பாராட்டி கொண்டாடுகின்றனர் என்றும் ஆனால் தமிழகத்தின் இந்த வீரர்களை கொண்டாடுவதில்லை என்றும், இதுபோன்ற நிலையை ஏற்க முடியாது என்று காட்டமாக கூறினார் 
 
மேலும் தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார் மற்றும் கிரிக்கெட் ஸ்டார் ஆகிய மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரண தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு: விஜயகாந்த் ஆவேசம்