கரூர் துயரம் தொடர்பாக தவறான கருத்து பரப்பியதாக புகார்: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

Siva
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (09:53 IST)
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த FIR, கரூர் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது. 
 
இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments