Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிமணி எம்பியை வெளியே போ என கூறிய திமுக நிர்வாகிகள்: பெரும் பரபரப்பு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (14:32 IST)
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் எம்பி  ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோதிமணி எம்பியை திடீரென திமுக நிர்வாகிகள் வெளியே போ என கூறியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து நான் என்ன விருந்து சாப்பிடவா வந்துள்ளேன்? அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டு இப்படி அசிங்க படுத்துகிறீர்களே?  இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா என ஆவேசமாக பேசிய ஜோதிமணி எம்பி கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்து வெளியே வந்தார் 
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக தர மறுப்பதாகவும் இதனால் ஜோதிமணி ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments