Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஜிபிக்கு எதிராக புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டலா? ஜோதிமணி எம்பி புகார்

Advertiesment
டிஜிபிக்கு எதிராக புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டலா? ஜோதிமணி எம்பி புகார்
, திங்கள், 1 மார்ச் 2021 (16:24 IST)
சிறப்பு டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டப்படுவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் சிறப்பு டிஜிபி ஆன ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். இதனை அடுத்து ராஜேஷ் தாஸ் காத்திருக்கும் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார் என்பதும், அவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது பாலியல் புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபி யை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.வெட்கக்கேடானது. உடனடியாக  விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 3 முதல் தேமுதிக வேட்பாளர் நேர்காணல்! – தனித்து களமிறங்குகிறதா தேமுதிக?