Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:03 IST)
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் எட்டாம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு படித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி வேலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 
 
சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம் என கலெக்டர் அமிர்தஜோதி அறிவித்துள்ளார். இதில் பணி நியமனம் பெற்றாலும் வேலை வாய்ப்பு பதிவு ரத்தாகாது என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments