Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (19:38 IST)
சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன்னர் புதுச்சேரி ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் http://www.jipmer.puducherry.gov.in  என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மொத்தம் 200 எம்.பி.பி.எஸ் உள்ளன. இந்த 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1.54 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் இந்த நுழைவுத்தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், காரைக்காலில் உள்ள இதன் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் என மொத்தம் 200 இடங்களுக்கு  நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர். 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. முதல் பிரிவில் 81,886 பேர்களும், 2-ஆவது பிரிவில் 72,605 பேர்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments