Publish Date: Fri, 08 Jun 2018 (19:38 IST)
Updated Date: Fri, 08 Jun 2018 (19:41 IST)
சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன்னர் புதுச்சேரி ஜிப்மர் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் http://www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மொத்தம் 200 எம்.பி.பி.எஸ் உள்ளன. இந்த 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1.54 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் இந்த நுழைவுத்தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், காரைக்காலில் உள்ள இதன் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் என மொத்தம் 200 இடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர். 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. முதல் பிரிவில் 81,886 பேர்களும், 2-ஆவது பிரிவில் 72,605 பேர்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.