Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை

Advertiesment
Actor prasanth
, புதன், 28 மார்ச் 2018 (14:10 IST)
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் பிரசாந்தை திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி, அதன் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சென்னை போக் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. தற்போது அடையாறில் தங்கியிருக்கும் கிரகலட்சுமி வாரத்திற்கு இரண்டு முறை இந்த வீட்டிற்கு வருவாராம். 
 
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டின் பின்பக்க ஜன்னலில் உள்ள கிரில் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், கிரகலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  போலிசார் விரைந்து சென்று சோதனை நடத்திய போது, கிரகலட்சுமியின் அறையில் உள்ள பீரோவிலிருந்து 20 சவரன் நகை,  ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் கிரகலட்சுமியின் தங்கை அறையில் 150 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில்தான் விருகம்பாக்கம் ஐ.ஓ.பி கிளையில் லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக சென்னையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக்கர் வீட்டுக்குதான் தேவை ; நாட்டுக்கு அல்ல : தமிழிசை பேட்டி