ஜேப்பியார் மறைவு- கருணாநிதி இரங்கல்
ஜேப்பியார் மறைவு- கருணாநிதி இரங்கல்
சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் வேந்தரும், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவருமான ஜேப்பியார் மரணத்திற்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் வேந்தரும், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவருமான ஜேப்பியார் சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து, தன்னுடைய சொந்த உழைப்பின் காரணமாக பல கல்வி நிறுவனங்களைக் கண்டு திறமையாக நடத்தி வந்தார். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர் களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.