Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் ஜாதகம் சொல்லுது அவங்க அமோகமா வருவாங்க!

ஜெயலலிதாவின் ஜாதகம் சொல்லுது அவங்க அமோகமா வருவாங்க!

ஜெயலலிதாவின் ஜாதகம் சொல்லுது அவங்க அமோகமா வருவாங்க!
, புதன், 30 நவம்பர் 2016 (11:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது ஜாதகப்படி அடுத்த வருடம் ஜெயலலிதாவுக்கு அமோகமாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார், அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என மருத்துவமனை தரப்பு கூறிவிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் தேதி குறித்து அவரது தோழி சசிகலா ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வேளச்சேரியில் உள்ள கேரள ஜோதிடரை கலந்து ஆலோசித்த சசிகலா அதில் திருப்தியடையாமல் மேலும் ஒரு முக்கிய ஜோதிடரை அழைத்து ஆலோசித்துள்ளார். அந்த ஜோதிடர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை படித்துவிட்டு பின்னர் பஞ்சாங்கத்தை வைத்து சில தகவல்களை சசிகலாவுக்கு கூறியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
 
அதில் ஜெயலலிதாவின் ஜாதகப்படி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவருக்கு நேரம் சரியில்லையாம். அதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தால் அதை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு பின்னர் வைத்துக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா அடுத்த ஒரு வருடம் அமோகமாக இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: திடீர் உடல் நலக்குறைவு!