Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கசிந்தது ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படம்: கலைந்த கூந்தலும் கலையிழந்த முகமும்!

கசிந்தது ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படம்: கலைந்த கூந்தலும் கலையிழந்த முகமும்!

Advertiesment
கசிந்தது ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படம்: கலைந்த கூந்தலும் கலையிழந்த முகமும்!
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:00 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் தங்களிடம் இருப்பதாக சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஜெயானந்த் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.


 
 
கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 நாட்கள் மருத்துவ போராட்டத்திற்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த 72 நாட்களும் ஜெயலலிதா எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்தார். யாரும் அவரை பார்க்க முடியவில்லை.
 
மாநில முதல்வராக இருந்த ஜெயலலிதாவை மாநில ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரும் பார்க்க முடியவில்லை. சசிகலா என்னும் இரும்புத்திரைக்கு பின்னார் இருந்த ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் அவரது புகைப்படத்தை கூட வெளியிடவில்லை.
 
இதனால் ஜெயலலிதாவின் மரணத்தின் மீது பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் பகிரங்க குற்றச்சாட்டுகளை ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து சசிகலா மீது சுமத்தினர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என ஓபிஎஸ் அணியினர் உட்பட பலதரப்பட்ட மக்கள் கூறிவந்தனர்.
 
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் தங்களிடம் இருப்பதாகவும், பச்சை உடையில் ஜெயலலிதா இருப்பதை எதிரிகள் பார்க்க வேண்டாம் என அவற்றை வெளியிடவில்லை என கூறினார். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது பலர் கொலைப்பழி சுமத்துவதால் தேவைப்பட்டால் அந்த புகைப்படத்தை தானே வெளியிடுவேன் எனவும் கூறினார் ஜெயானந்த்.
 
இந்நிலையில் சசிகலா குடும்பத்திடம் இருக்கும் அந்த புகைப்படத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் பார்த்ததாகவும் அதில் ஜெயலலிதா இருக்கும் நிலைமையை பார்த்து அவர் கண் கலங்கிவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
கம்பீரமாக பெண் சிங்கம் போல மெல்ல மெல்ல நடந்து வந்து காரில் அமரும் ஜெயலலிதா, கலையிழந்த முகத்துடன் மருத்துவமனையில் படுக்கையில் கால்களை நீட்டி சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறார். தலைக்கு பின்னால் தலையணைகளை உயரமாக வைத்து கால்களை நீட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அதில் அவரது கால்கள் நன்றாக தெரிகிறது என கூறப்படுகிறது.
 
பச்சை நிற மருத்துவமனை உடையில், ஆங்காங்கே தலைமுடிகள் அலைக்கழித்துப் பறக்கின்றன. கூந்தல் கலைந்திருக்கிறது, முகம் கலையிழந்திருக்கிறது. அவரது உதட்டோரம் சாப்பாட்டு துணுக்கு ஒட்டியிருக்கிறது. அருகில் சசிகலாவும், அப்பல்லோ நர்ஸும் இருக்கிறார்கள் என அந்த புகைப்படம் பற்றிய தகவல் கசிந்தவாறு உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருந்தினருக்கு காத்திருந்த பள்ளி நிர்வாகம்; கடுப்பாகி கொடியேற்றிய குரங்கு: வைரலாகும் வீடியோ!!