தோண்டி எடுக்கப்படுமா ஜெயலலிதா உடல்? இடம் மாறுகிறதா சமாதி?: அதிர்ச்சி தகவல்!
தோண்டி எடுக்கப்படுமா ஜெயலலிதா உடல்? இடம் மாறுகிறதா சமாதி?: அதிர்ச்சி தகவல்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதிக்கும் தினமும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கும் சமாதி எழுப்பவும் உரிய அனுமதி பெறவில்லை எனவும், இதனால் அவரது சமாதி மாற்றப்பட்டு வேறு இடத்தில் அமைக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.
அதாவது எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்ப்பட்ட பின்னர் அங்கு சமாதி எழுப்பவோ, கட்டிடம் எழுப்பவோ, சீரமைப்பு பணிகள் செய்யவோ யாருக்கும் அனுமதி இல்லை. இந்த கடலோரப்பகுதி C.R.2 எனும் பகுதியின் கீழ் வருகிறது. இந்த பகுதி வளர்ச்சியடைந்த பகுதியாக கருதப்படுகிறது.
இந்த பகுதியில் ஏதாவது சீரமைப்பு பணியோ கட்டமைப்பு பணியோ மேற்கொள்ள வேண்டுமானால் முன்கூட்டியே மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இது குறித்து கூறிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்தியாநந்த் ஜெயராமன் எம்ஜிஆர் சமாதி இடம் பெற்றுள்ள பகுதியில் சமாதியோ, மணி மண்டபமோ, சீரமைப்போ செய்ய வேண்டுமானால் மதிய அரசிடம் பார்ம்:1 மூலமாக அனுமதி வாங்க வேண்டும் என்றார்.
இந்த அனுமதியை வாங்க நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஜெயலலிதா இறந்த அடுத்த நாளே மெரினாவில் கொண்டு போய் அடக்கம் செய்துவிட்டார்கள். இதனால் ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் சமாதி அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.