Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

Advertiesment
Jayalalitha

Siva

, வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அவை ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், அவரிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைடூரியம் உள்ளிட்ட அசையும் சொத்துகளும், அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. கர்நாடக அரசிடம் வழக்கு செலவு கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டு, தமிழக அரசு ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனிடையே, ஜெயலலிதாவின் சொத்துக்கள் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து, பிப்ரவரி 14, 15ம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஜெயலலிதாவின் ஆபரணங்கள் மற்றும் நகைகள் ஒப்படைக்க, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. 27 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், சுமார் 1000 ஏக்கர் நில ஆவணங்கள், இன்றைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையுடன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!