Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா ஜாதகம்: உடல்நிலை குறித்து என்ன சொல்கிறது?

ஜெயலலிதா ஜாதகம்: உடல்நிலை குறித்து என்ன சொல்கிறது?

Advertiesment
ஜெயலலிதா ஜாதகம்: உடல்நிலை குறித்து என்ன சொல்கிறது?
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (14:28 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரகாலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகிறது.


 
 
இந்த வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தும், வதந்திகள் நின்றபாடில்லை. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவரது உடல்நிலையில் உள்ள பிரச்சனை மற்றும் அது எப்பொழுது சரியாகும் போன்ற தகவல்கள் சமூக வலைதளமான வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.

webdunia

 
 
அதிமுக தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதக தகவலில், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில், குருவுக்கு திரிகோணத்தில் ராகு இருக்கிறது. குரு நமது பிராணனை குறிப்பார். ராகு அதை தடுக்கும் செயல்கள் செய்வார்.
 
தற்போது எனவே பிறப்பு குருவுக்கு திரிகோணத்தில், கோச்சார ராகு செல்லும் போது இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும் கோச்சார குருவின் பார்வை பிறப்பு சுக்கிரன் மீது இருப்பதால் மருந்துகள் வேலை செய்யும். மேலும் செய்யும் பரிகாரங்கள் பலிக்கும். குரு கல்லீரல் மற்றும் சுவாசத்தை குறிப்பவர், எனவே இந்த உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.
 
இன்று அமாவாசை இன்றில் இருந்து பரிகாரமாக ராகுவின் அதிதேவதை தெற்கு திசை பார்த்த காளிக்கு பால் அபிஷேகம் 9 நாட்கள் ராகு காலத்தில் செய்வது நல்ல பலன்களை தரும்.
 
இந்த ஜாதக தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதிக்கு இன்று 25வது பிறந்த நாள் ; ஒருநாள் உண்மை வெளிவரும் : சகோதரி உருக்கம்