Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை அன்புடன் விசாரித்த ஜெயலலிதா தன்னை பற்றி கேட்டபோது கண்ணீர் வடித்தார்!

என்னை அன்புடன் விசாரித்த ஜெயலலிதா தன்னை பற்றி கேட்டபோது கண்ணீர் வடித்தார்!

Advertiesment
என்னை அன்புடன் விசாரித்த ஜெயலலிதா தன்னை பற்றி கேட்டபோது கண்ணீர் வடித்தார்!
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:41 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து அவரது இரத்த உறவுகள் குறித்தான செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.


 
 
மக்களால் நான், மக்களுக்காக நான். எனக்கென்று குடும்பம் கிடையாது என கூறியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது அண்ணன் மகள் தீபா, எனது அத்தை ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுக்கிறார் சசிகலா என கூறினார்.
 
தற்போது வரை சசிகலா மீது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவரது சகோதரன் தீபக் அவரது இறுதி சடங்கின் போது சசிகலா உடன் இருந்தார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் சகோதரியின் மகள் என தற்போது அம்ருதா என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் மற்றொருமனைவியின் மகளின் மகள் இந்த அம்ருதா என கூறப்படுகிறது.
 
அம்ருதாவின் முகமும் ஜெயலலிதாவின் முகமும் ஒரே மதியாக இருக்கிறது. ஜெயலலிதா அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது அவரை சந்திக்கவிடாமல் தன்னை சசிகலா தடுத்ததாக இவரும் குற்றம்சாட்டுகிறார் அம்ருதா.
 
மேலும் கூறிய அம்ருதா, முன்னர் சசிகலா ஜெயலலிதா அம்மாவுடன் இல்லாதபோது ஜெயலலிதா அம்மாவை நான் நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். அப்போது அவர் எனது குடும்பத்தை பற்றி அன்போடு விசாரித்தார். ஆனால் அவரை பற்றி நான் விசாரித்த போது அவர் கண்ணீர் வடித்தார் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு தங்கை இருக்கிறார் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்!