Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தூர் அருகே நின்ற ஜெ.வின் பழைய கார்; காவல்துறை தீவிர விசாரணை

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (17:59 IST)
சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


 

 
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே உள்ள ஆரோம் கிராமத்தில் தமிழக பதிவு எண் கொண்ட கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளது. 
 
இதுகுறித்து நேற்று முன்தினம் சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் காரில் இருந்த ஆவணங்களை சரி பார்த்துள்ளனர். காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த கார் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தத கார் என்பது தெரியவந்துள்ளது. 
 
ஆனால் அந்த காரை அவர் கடைசிவரை பயன்படுத்தவில்லை. ஜெயலலிதா, அந்த காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த காரை சிறிது காலத்திற்கு பின் மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். கார் பதிவு எண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
 
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments