Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.6 கோடியை கட்டிய அதிமுக

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.6 கோடியை கட்டிய அதிமுக
, வெள்ளி, 16 ஜூன் 2017 (16:41 IST)
ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை கட்சி சார்பிலே அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அப்போலோ மருத்துவமனைக்கு காசோலை கொடுக்கப்பட்டது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


 

 
நேற்று தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும், இப்தார் நோன்பு விழாவும் தினகரன் தலைமையில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நிபந்தனைகள் வைத்ததை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட வைகைச்செல்வன் கூறியதாவது:-
 
தினகரனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே எந்த பிளவும் இல்லை ஒற்றுமையாகதான் இருக்குறோம். அம்மாவின் மருத்துவ செலவை அதிமுக கட்சி சார்பில் கொடுப்பதாக முடிவு செய்து ரூ.6 கோடியை காசோலையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் - முதல்வரின் மண்டை உடைந்தது