இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்த்தித்த பிறகு பேட்டியளித்த அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அப்படிதான் சசிகலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து, இரட்டை இலையை முடக்க கோரிய பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று டெல்லி சென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தம்பிதுரை கூறியதாவது:-
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளோம். அதற்கான அத்தாட்சிகளை தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளோம். இப்போது திடீரென செல்லாது என கோரிக்கைவிடுப்பது சரியில்லை.
1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா, அதிமுக பொதுக்குழுவால்தான் கட்சி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகுதான் எல்லா உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார். ஆனால், அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள்.
அதிமுக கட்சியில் எந்த பிளவும் கிடையாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்க கூடாது என நாங்களும் கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.