Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா ஒரு தெய்வ பிறவி: அதிமுக எம்.பி. பேச்சு!

ஜெயலலிதா ஒரு தெய்வ பிறவி: அதிமுக எம்.பி. பேச்சு!

Advertiesment
ஜெயலலிதா ஒரு தெய்வ பிறவி: அதிமுக எம்.பி. பேச்சு!
, சனி, 24 செப்டம்பர் 2016 (20:29 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அதிமுகவின் கோயில்கள், மசூதிகள், ஆலயங்களில் பிராத்தனை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப அதிமுக மகளிர் அணி சார்பாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
அப்போது பேசிய எம்.பி. விஜிலா சத்யானந்த் முதல்வர் ஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி என்பதால் அவர் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் வராது என்றார்.
 
ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நிலைக்கு ஒன்றும் ஆகாது. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவருக்கு சில தெய்வீக சக்திகள் உள்ளன. எனவே அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியீடு!