Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவை கடிந்து கொண்ட ஜெயலலிதா?: தொடர் குற்றச்சாட்டுகள் நடவடிக்கை இருக்குமா?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (10:47 IST)
டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா, திமுக எம்.பி.திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஏற்கனவே சசிகலா புஷ்பா, வாலிபர் ஒருவருடன் தான் மது அருந்தியதை பற்றி பேசிய ஆடியோ வெளியாகியது. இதனையடுத்து இதே திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மூன்றாவது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் தாக்கிய சம்பவம் டெல்லி வட்டாரத்தில் தமிழகத்துக்கும், அதிமுகவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க சசிகலா புஷ்பாவுக்கு உத்தரவு போனது. இதனையடுத்து நேற்று மாலை அவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையுடம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்பின் போது சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா கடுமையாக கண்டித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சைக்குறிய விதத்தில் செயல்பட்டு வரும் சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments