Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
, புதன், 23 செப்டம்பர் 2015 (21:23 IST)
பக்ரீத் பண்டிகைய முன்னிட்டு, இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தனக்கு ஒரே மகன் என்ற நிலையில்கூட, இறைவனின் கட்டளையை ஏற்று, இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்தார் இறைத்தூதர் இப்ராஹிம். அவரின் அந்த தியாகத்தை நினைவு கூறும் தினமே பக்ரீத் திருநாளாகும்.
 
இந்த புனித நாளில், பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும், எளியவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் நிச்சயம் அமைதி நிலவும். வளம் பெருகும்.
 
உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும். அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்வேண்டும்.
 
இந்த இனிய நாளில், இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil