Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா தகன ஏற்பாடுகள் தீவிரம்!

Advertiesment
ஜெயலலிதா தகன ஏற்பாடுகள் தீவிரம்!
, செவ்வாய், 6 டிசம்பர் 2016 (11:12 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய பணிகள் தீவிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.


 

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 இறந்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு மத சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு இன்று அதிகாலை முதலே பொது மக்கள் அஞ்சலிக்கு ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
 
மாலை 4.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் தகனம் அவரது குடும்ப வழக்கப்படி செய்யப்பட உள்ளது. காலையிலேயே ஜெயலலிதாவை அடக்கம் செய்ய இருக்கும் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தகனம் செய்யும் ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன்பிறகு, அவருடைய அஸ்தியை கலசத்தில் வைத்து, அங்கே அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விம்மி விம்மி அழுத ஜெ.வின் செல்ல பிள்ளை விந்தியா!