Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மர்ம மரணம்; உண்மை கண்டறியும் கருவி கொண்டு சசிகலா குடும்பத்தினரிடம் விசாரணை??

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:10 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். 
 
எனவே, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
 
இதன்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று ஆறுமுகசாமி கமிஷனில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 
 
இந்நிலையில் இன்று தீபாவின் கணவர் மாதவன் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா, நடராஜன், திவாகரன், டிடிவி தினகரன், ராஜம்மாள், பூங்குன்றன் உள்ளிட்டடோரிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேலும் மனு ஒன்றை விசாரணை கமிஷனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இதனை ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன், கணக்கில் எடுக்குமா அல்லது வேறேதுனும் விசாரணை யுக்திகளை கையாள உள்ளார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments