Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சீதக்காதி' படம் பார்த்த பாதிப்பா? அமைச்சர் விஜயபாஸ்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

'சீதக்காதி' படம் பார்த்த பாதிப்பா? அமைச்சர் விஜயபாஸ்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
, சனி, 22 டிசம்பர் 2018 (21:01 IST)
சமீபத்தில் வெளிவந்த 'சீதக்காதி' திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் ஆன்மா நடிகர்களின் உடம்பில் புகுந்து நடிப்பதை பலர் பார்த்திருப்பர். அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா வந்து அவர் வென்ற தொகுதிகளில் ஒன்றான ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு உதவும் என அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், 'தங்கத்தமிழ்செல்வன் நாளை எங்கிருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்றும், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெ.வின் ஆன்மா உதவி செய்யும் என்றும் அவ்ர் கூறினார்.

webdunia
சீதக்காதி' படம் பார்த்த பாதிப்பில் அமைச்சர் இவ்வாறு கூறி வருவதாகவும், ஆர்.கே.நகர் தேர்தலின்போது வராத ஜெயலலிதாவின் ஆன்மா, ஆண்டிப்பட்டி தேர்தலின்போது மட்டும் எப்படி வரும்? என்றும் நெட்டிசன்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி vs உதயநிதி: கொளுத்தி போட்ட செல்லூர் ராஜு